வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு நிரந்தரமானது – ராமதாஸ்

சமீபத்தில் தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளித்து உத்தரவிட்டது.
இதற்கு தமிழகத்தில் பல்வேறு சமூகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும்,துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தற்காலிகமானது என பேசியுள்ளார்.
இந்நிலையில்,இன்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு நிரந்தரமானது என தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வரிடம் தொலைபேசியில் பேசியதாகவும் மற்றும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு நிரந்தரமானது என முதல்வர் கூறியதாகவும் தெரிவித்தார்.இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.