குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளருக்கு கொரோனா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது.
தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம் என மக்கள் அதிகமாக கூடுகின்றனர். இதனால், கொரோனா பாதிப்பும் அதிகரிக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த வரிசையில், குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளரும் இணைந்துள்ளார்.