ஓபிஎஸ்க்கு ராமதாஸ் பதிலடி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, பரப்புரையில் ஈடுபட்டிருந்த ஈபிஎஸ் வன்னியர்களுக்காக ஒதுக்கப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீடு தற்காலிகமானது தான் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், உள் ஒதுக்கீடு குறித்த துணை முதலமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது சாதிப்பிரச்சனை அல்ல. சமூக நீதி பிரச்சனை.
சட்டப்பேரவையில் ஒரு சட்டம் இயற்றப்பட்ட பின்பு, அடுத்த சட்டம் இயற்றபடும் வரை அந்தச் சட்டம் செல்லும் நீக்க முடியாது. மேலும், முதல்வரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒபிஎஸ் கருத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அப்போது, 10.5 சதவீத இடஒதுக்கீடு நிரந்தரமானது என முதல்வர் உறுதியளித்ததாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.