ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் நாட்டிற்கு உழைப்பவர் மோடி – எடப்பாடி பழனிச்சாமி

பாரத பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரைக்காக தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார்.அவர் தாராபுரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கலந்து கொண்டார்.அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி,பிரதமர் மோடி ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் நாட்டு மக்களின் நலனுக்காக உழைத்து வருகிறார்.மேலும்,தமிழகத்தின் மீது பேரன்பு கொண்டவர் பிரதமர் மோடி எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
நாட்டின் வளர்ச்சி குறித்து நித்தம் யோசிப்பவர் பிரதமர் மோடி எனவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.