முதல்வர் டெபாசிட் கூட வாங்க மாட்டார்! ஸ்டாலின் சவால்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களிலும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி, இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, அவர் “அதிமுக அரசு சிறுபான்மையினரை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மத்திய அரசு முத்தலாக் சட்டம் கொண்டு வந்த போது, அதிமுக அரசு அதனை ஆதரித்து வாக்களித்திருந்தது. அது வாக்களிக்காமல் இருந்திருந்தால் முத்தலாக் சட்டம் வந்திருக்கவே இருக்காது.

அதிமுக.,வும் பாமகவும் தான், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தது இதன் காரணமாக அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் தற்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என கூறியுள்ளது. இது சிறுபான்மை இன மக்களை ஏமாற்றும் செயல். 

முதல்வர் சும்மா பச்சை துண்டைப் போட்டுக் கொண்டு விவசாயி என்று பொய் கூறுகிறார். இந்த தேர்தலில் அவரது தொகுதியிலேயே டெபாசிட் கூட வாங்க மாட்டார்.” என்று பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தைப்பூச இலவச புடவைகள் வழங்கும் விழா கூட்ட நெருசலில் சிக்கி 4 பெண்கள் பரிதாப பலி

வாணியம்பாடியில் தைப்பூசம் முன்னிட்டு இலவச புடவைகள் வழங்கும் விழாவிற்காக டோக்கன்களை பெற கூட்ட…

‘செவ்வாய் கிரகத்தில் கூட கால் வைத்து விடலாம்… கோவில் கருவறைக்குள் முடியாது’ ஆசிரியர் கி.வீரமணி கோபம்…!

செவ்வாய் கிரகத்தில் கூட இன்றைய காலகட்டத்தில் மனிதன் கால் வைக்க முடிந்த நிலையில்…