நீங்கள் கையேந்த வேண்டிய இடம் டெல்லி தான் – ராதாரவி பேச்சால் சர்ச்சை

தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என பாஜக முயற்சி செய்து வருகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜகவினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து நடிகர் ராதாரவி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “இன்னும் 40 ஆண்டுகளுக்கு மத்தியில் ஆளப்போவது பாஜக தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

நீங்கள் கையேந்தும் இடம் டெல்லி தான். அதனால் எங்களுக்கு வாக்களித்தால் அந்த நிலை வராது. எங்களைத் தவிர, வேறு யாரையாவது தேர்ந்தெடுத்தால் நாராயணசாமிக்கு ஏற்பட்ட நிலை தான் அவர்களுக்கும். அவர்களையும் முட்டி போட வைப்போம். எனவே, எங்களுக்குத் தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

மேலும், உண்மையான இந்துவாக உள்ள யாரும் எங்களுக்குத் தான் வாக்களிப்பர்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தைப்பூச இலவச புடவைகள் வழங்கும் விழா கூட்ட நெருசலில் சிக்கி 4 பெண்கள் பரிதாப பலி

வாணியம்பாடியில் தைப்பூசம் முன்னிட்டு இலவச புடவைகள் வழங்கும் விழாவிற்காக டோக்கன்களை பெற கூட்ட…

‘செவ்வாய் கிரகத்தில் கூட கால் வைத்து விடலாம்… கோவில் கருவறைக்குள் முடியாது’ ஆசிரியர் கி.வீரமணி கோபம்…!

செவ்வாய் கிரகத்தில் கூட இன்றைய காலகட்டத்தில் மனிதன் கால் வைக்க முடிந்த நிலையில்…