திமுகவை மட்டுமே சில கட்சிகள் விமர்சிக்கின்றன; திருமாவளவன் குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் தேர்தலை எதிர்கொள்கிறது.
தனது கட்சி வேட்பாளர்களுக்காவும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகவும் தேர்தல் பரப்பிரையில் ஈடுபட்டு வருகிறார். இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர், “ இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருக்க மாட்டார். அமித்ஷா தான் முதல்வராக இருப்பார்.
மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக போன்ற கட்சிகள் திமுகவை மட்டும் தான் விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கு திமுக தான் இலக்கு. தமிழகத்தில் பழனிச்சாமியை முதல்வராக்கினால் மோடியை முதல்வராக்குவதாகவே அர்த்தம் ” என குற்றஞ்சாட்டியுள்ளார்.