டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு!

தமிழக சட்டமன்றத் தேர்தலை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சி, தினகரன் தலைமையில் எதிர்கொள்கிறது. இதற்காக, டிடிவி தினகரன் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, மார்ச் 23 ஆம் தேதி விழுப்புரத்தில் பரப்புரை மேற்கொண்டிருந்தார். முதல்வர் ஊர்ந்து சென்று பதிவி பெற்றவர் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார். அதற்கு, ஊர்ந்து செல்ல நான் என்ன பல்லியா? பாம்பா? என முதல்வர் பதிலளித்திருந்தார்.
இதைக் குறிப்பிட்டு பேசிய டிடிவி தினகரன், ஊர்ந்து சென்றதை பழனிச்சாமி ஏன் மறுக்கிறார் என கேட்டிருந்தார். தொடர்ந்து, துணை முதல்வர் மீதும் சி.வி. சண்முகம் பற்றியும் விமர்சித்திருந்தார். இதனால், அவர் மீது தவறான தகவல் பரப்புவது, தேர்தல் விதிமுறைகளை மீறுவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.