அதிமுக எம்.எல்.ஏவின் ஊழியர் வீட்டில் கட்டுகடாக பணம் பறிமுதல்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியில், அதிமுக சார்பில் எம்.எல்.ஏ. ஆர்.சந்திரசேகர் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் இவர் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இவரது நிறுவனத்தில் ஜேசிபி ஓட்டுனராக வலசுப்பட்டியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவர் வேலை பார்க்கிறார். அவரது வீட்டிற்கு நள்ளிரவு சென்ற வருமான வரித்துறை இணை இயக்குநர் மதன்குமார் தலைமையிலான 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவரது வீட்டியிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் இருந்த வைக்கோல் போரிலிருந்து ரூ.500 நோட்டுகள் கட்டுக்கட்டாக எடுக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான பணத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய அழகர்சாமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதேபோல், அருகில் உள்ள ஒப்பந்தகாரர் தங்கபாண்டியன் மற்றும் கோட்டைப்பட்டியில் உள்ள ஆனந்த என்ற முருகானந்தம் ஆகியோர் வீடுகளிலும், தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் நள்ளிரவு சோதனை மேற்கொண்டனர். ஆனால், அந்த இடங்களில் பணம் ஏதும் கைப்பற்றவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…