புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.தற்போது புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குண்டுராவ், வீரப்பமொய்லி, புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 15, திமுக 13, இந்திய கம்யூனிஸ்ட், விசிக தலா 1 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்,அங்கன்வாடி ஊழியர்களுக்கு போனஸ்,நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை,புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறப்படும், புதுச்சேரியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்,ஆதிதிராவிடர் வாரியத்தின் மூலம் வாங்கப்பட்ட கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் போன்ற அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளது.