தேர்தல் விதிமுறைகளை மீறும் மோடி – மம்தா ஆவேசம்

மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில்,மேற்கு வங்கத்தில் நேற்று முதல் கட்டமாக 30 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
முதல்கட்ட வாக்குப்பதிவிற்கு பின் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வருகிறார் என கடுமையாக சாடினார்.
சமீபத்தில் பிரதமர் மோடி வங்க தேசத்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.இது அரசியல் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட பயணம் எனவும் இதன் மூலம் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் மம்தா குற்றம் சாட்டினார்.