இந்த தொகுதிக்குள் வரும்போதெல்லாம் அம்மா ஞாபகம்தான் வருகிறது – எடப்பாடி பழனிச்சாமி

வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக சார்பில் அனைத்து தொகுதிகளிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தற்போது அவர் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து கண்ணீர் மல்க பரப்புரை செய்து வருகிறார்.இந்த தொகுதியில் உள்ளே வரும் போதெல்லாம் அம்மாவின் நினைவுதான் வருகிறது எனவும் உருக்கமாக பேசி மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.