இது பழைய அதிமுக அல்ல முகமூடி அதிமுக,ராகுல் கடும் தாக்கு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ல் நடைபெற உள்ளது.இதனையடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகை புரிந்துள்ளார்.
தேர்தல் பரப்புரையில் பேசிய ராகுல் காந்தி,தமிழகம் பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ளது.தமிழர்களின் மொழி,கலாச்சாரம்,பண்பாடு சிறந்து விளங்குவதாகவும் பெரியோருக்கு தலைவணங்குவது தமிழ்நாட்டின் முக்கிய பண்பாடு எனவும் பேசினார்.ஆனால்,தற்போது உள்ள அதிமுக மத்தியில் ஆளும் பாஜக-விற்கு பயந்து தலைவணங்கி வருவதாக தாக்கிப் பேசினார்.
மேலும்,இப்போது ஆட்சி செய்யும் அதிமுக உண்மையான அதிமுக-வே இல்லை இது முகமூடி அணிந்த அதிமுக என விமர்சித்தார்.
மத்தியில் ஆளும் பாஜக தமிழக அரசை இயக்கி வருகிறது எனவும் இங்குள்ள அதிமுக மீது ஊழல் புகார்கள் உள்ளதால் அவர்களுக்கு வேறு வழியின்றி பாஜக-வின் கட்டளைகளுக்கு ஏற்ப இயங்கி வருவதாகவும் கூறினார்.