சொந்த தொகுதியில் ஸ்டாலின் வாக்குபதிவு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து தலைவர்களும் மும்முரமாக பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த இரண்டு தேர்தல்களிலும் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து மூன்றாம் முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை நடத்தி வரும் ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியில் பரப்புரை செய்துள்ளார். சொந்த தொகுதி என்பதால் அங்கு அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.