அதிமுக மீதான மக்களின் அதிருப்திக்கு பாஜக தான் காரணமா?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கிறது. இதனையொட்டி அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெங்கடாச்சலம் நேற்று பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோட்டை பகுதியில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்களிடம் சென்று அதிமுக வேட்பாளர் வெங்கடாச்சலம் வாக்கு சேகரித்தார்.
வெங்கடாசலம் தொழுகை முடிந்து வெளியில் வருபவர்களிடம் கரம் கூப்பி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். ஆனால், அவரை கண்டுகொள்ளாமல் அவர்கள் தங்களது வேலையை மட்டும் பார்த்து கிளம்பிக் கொண்டிருந்தனர்.
அங்குள்ள மக்களில் சிலர் அதிமுக, தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் மக்களிடம் இந்த அலட்சியம் உள்ளது என சொல்லிச் சென்றனர்.