மோடி அதிமுக-வின் டாடி – மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக-வின் வேட்பாளர்களை ஆதரித்து பல்லாவரம்,ஆலந்தூர்,சோழிங்கநல்லூர் தொகுதிகளில் வாக்கு சேகரித்து வந்தார்.அப்போது அவர் பிரதமர் மோடிதான் அதிமுக-வின் டாடி என விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,அதிமுக மக்களுக்கு 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.ஆனால்,அதிமுக வெறும் 1000 ரூபாய் மட்டுமே கொடுத்தது.மீதம் உள்ள 4000 ரூபாயை திமுக கொடுக்கும் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.அதனை தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று கொடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும்,கொரோனா இரண்டாவது அலை வீசுகின்ற போது அம்மாவின் ஆட்சியில் கொரோனா இல்லை என முதல்வர் பழனிச்சாமி கூறுவது வேடிக்கையாக உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.