பாஜக-வின் சொந்தக்காரராக மாறிய தேர்தல் ஆணையம் – மம்தா

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றான மேற்குவங்கத்தில் முதல் கட்ட தேர்தல் மார்ச் 27-ல் நடைபெற உள்ளது.இதனையடுத்து,பல்வேறு தலைவர்களும் மேற்கு வங்கத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.தற்போது மேற்கு வங்க வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையம் பாஜக-வின் உறவினர் போல செயல்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை தேர்தல் ஆணையம் ஐந்து முக்கிய அதிகாரிகளை பணியிடைமாற்றம் செய்து உத்தரவிட்டனர்.இதனையடுத்து மம்தா பானர்ஜி, எத்தனை அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டாலும் திரிணாமுல் காங்கிரஸின் வெற்றியை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *