ஆளுங்கட்சியின் அராஜகத்தை கண்டிக்காத தேர்தல் ஆணையம் – தொல்.திருமாவளவன்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல்பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும்,தங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்து வருகின்றனர்.
தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளார்.அதன் பின் பேசிய அவர் ஆளுங்கட்சியின் அராஜகத்தை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த தவறுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் பேசிய அவர்,தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் அது குறித்து மத்திய,மாநில அரசுகள் சரிவர நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.மத்திய அரசிற்கு தமிழகம் குறித்து எந்த கவலையும் இல்லை எனவும் பேசினார்.
தற்போது இலங்கை கடற்படையினரால் மீண்டும் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை மீட்க அரசு நடவடிக்கை வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.