ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் – விசிக தேர்தல் அறிக்கை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் விசிக-வின் தேர்தல் அறிக்கையை தொல் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ளார்.
அதில், “ஒரேதேசம் – ஒரேகல்வி’ என்ற அடிப்படையில், தேசிய கல்விக் கொள்கையை
வரையறுத்து, அதன்மூலம் ‘ஒரே மதம் – ஒரே மொழி ஒரே கலாச்சாரம்’ என்ற செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த, பாஜக மேற்கொள்ளும் முயற்சிகளை மக்கள் துணையுடன் முறியடிப்போம்
நீர், நிலம், காற்று ஆகியவற்றை நஞ்சாக்கிப் பாழ்ப்படுத்தும் வகையிலான ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்துப் போராடுவோம்.
பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் சிறுபான்மையினர். மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் நலன்களையும் மேம்பாட்டையும் பாதுகாத்திட தொடர்ந்து பாடுபடுவோம்.
மகளிர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பையும் மேம்பாட்டையும் உறுதிப்படுத்த, 50 சதவிகிதம் பிரதிதிநித்துவம் அளிக்கும் வகையிலான இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்படும்.
இந்துராஷ்டிரியத்தை அமைக்க தடையாக இருக்கவும் அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் பாஜகவின் செயல்களை அம்பலப்படுத்துவோம். இதற்காக அனைத்து ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி போராடுவோம்” என்ற வாக்குறுதிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.