ராகுலை புறக்கணிக்கிறாரா வைகோ?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் கடைசிகட்ட பிரச்சாரங்கள் அனல் பறக்கிறது. சேலம் மாவட்டத்தில், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். வரும் 28 ஆம் தேதி நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளில் ஒன்றான மதிமுக சார்பில் வைகோ கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 28 ஆம் தேதி, விருதுநகர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என 10 நாட்களுக்கு முன்பே திமுக மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தேதி வாங்கிவிட்டார். இதனால், வைகோ இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது. அவருக்குப் பதில் மக்களவை உறுப்பினர் கணேச மூர்த்தி கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.