பழனிச்சாமியை கண்டுகொள்ளாத மக்கள்! அதிமுகவினர் அதிர்ச்சி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சியினரும் அனல் பறக்கும் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அதிமுக சார்பாக முதல்வர் பழனிச்சாமி, இன்று மதுரையில் பரப்புரை செய்து வருகிறார்.
அப்போது, அவர் பேசிக் கொண்டிருக்கையில் அதைக் கண்டு கொள்ளாமல் கூட்டம் கூட்டமாக தங்கள் வேலையை பார்த்து சென்று கொண்டிருந்தனர். இதைப் பார்த்த அதிமுகவினர் கவலை அடைந்துள்ளனர்.
ஏற்கனவே, பாஜக கூட்டணியால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் பரப்புரைக்குச் செல்லும் அதிமுகவினரை கண்டுகொள்ளாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.