தமிழகத்திற்கு முதன் முறையாக வருகை தரும் பிரியங்கா காந்தி
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கடைசி கட்ட பரப்புரைகள் அனல் பறக்க நடந்து வருகிறது. தேசிய கட்சித் தலைவர்களும் தமிழகம் வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பாக, ராகுல் காந்தி தமிழகத்துக்கு பலமுறை வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவிட்டார்.
அதிமுக கூட்டணியில் பாஜக உள்ள நிலையில், ஏப்ரல் 2ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, அதிமுக – பாஜக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இந்நிலையில், ராகுல் மீண்டும் மார்ச் 28 ஆம் தேதி கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளார். இதனையடுத்து, பிரியங்கா காந்தியும் தமிழகத்துக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. அவர், கன்னியாகுமரியில் வரும் 27 ஆம் தேதி பரப்புரை செய்யவுள்ளார்.