பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாது – திருமா

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, “பாஜக தான் போட்டியிடும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. மதவாதத்தை தூண்டும் பாஜகாவால் ஒரு போதும் காலூன்ற முடியாது. சிறுபான்மையினருக்கு எதிரான மக்களிடம் வெறுப்பை வளர்ப்பதே பாஜகவின் முக்கிய வேலை. அதானிக்கு ஆதரவாக செயல்படும் மோடி இந்தியாவை அடகு வைத்து விட்டார்” என தெரிவித்துள்ளார்.