நீங்க பேசிட்டு இருங்க நாங்க வாறோம் என கலைந்து சென்ற கூட்டம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளது. இதனால், அனைத்து கட்சித் தலைவர்களும் அனல் பரக்கும் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலில் திமுக வுக்கு அதிக தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இல்லை என்பது ஒரு புறம் இருக்க, அதிமுகவினர் பரப்புரைக்குச் செல்லும் இடங்களிலும் மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது.

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று திருச்சியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். திருப்பூர் யூனியன் மில் சாலையில் அதிமுக சார்பில் திருப்பூர் வடக்கு, தெற்கு காங்கேயம் மற்றும் பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசிக் கொண்டிருந்தார்.

அவர், பேசிக் கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் அமர்ந்திருந்த பொது மக்களில் பலர் எழுந்து போயுள்ளனர். இது, மேடையில் இருந்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *