பாஜக கட்சியிலிருந்து விலகுகிறாரா நடிகை கவுதமி?

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கொடுக்காத விரக்தியால் ராஜபாளையத்திற்கு சென்று பாஜக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதை நடிகை கவுதமி வெறுத்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு அதிமுக, பாஜக கூட்டணி  உடன்பாடு ஏற்படும் முன்பே ராஜபாளையம் தொகுதி பாஜக பொறுப்பாளராக நடிகை கவுதமி நியமிக்கப்பட்டார். இதனால் அவர் கடந்த 3 மாதங்களாக, ராஜபாளையத்தில் தங்கியிருந்து கட்சி, தேர்தல் பணிகளை செய்து வந்தார். இதனால் ராஜபாளையம் தொகுதி பாஜக வேட்பாளராக நடிகை கவுதமியே அறிவிக்கப்படுவார் அனைவரும் எதிர்பார்த்தனர்.

இதனிடையே அத்தொகுதியில் போட்டியிட பாஜகவுக்கு வாய்ப்பு வழங்கப்படாததுடன் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியானது. ராஜபாளையம் தான் போச்சு, விருதுநகரிலாவது போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என ஆவலோடு கவுதமி காத்திருந்தார். ஆனால், பாண்டுரெங்கன் என்பவருக்கு பாஜக மேலிடம் வாய்ப்பு கொடுத்தது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த கவுதமி சென்னை சென்றார். மேலும் அவர் தற்போது புதுச்சேரி, கோவை என மாறிமாறி பிரச்சாரம் செய்கிறார்.  ராஜபாளையத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் தொகுதி பொறுப்பாளாராக நியமிக்கப்பட்ட பகுதிக்கு நடிகை கவுதமி பிரச்சாரத்துக்கு செல்லாதது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *