அதிமுகவில் இணைந்த திமுக முன்னாள் அமைச்சர்

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடிக்கிய தருமபுரி மாவட்டத்தின் திமுக செயலாளராக முல்லைவேந்தன் பணியாற்றி வந்தார். மொரப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
2014-ம்ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர்கள் தோல்விக்குமாவட்ட செயலாளர்களிடம் திமுக தலைமை விளக்கம் கேட்டது. முல்லைவேந்தன் முறையான விளக்கம் அளிக்கவில்லை என காரணம் கூறி திமுக தலைமை அவரை கட்சியை விட்டு நீக்கியது. இதனால், 2016-ம் ஆண்டு அவர் தேமுதிக-வில் இணைந்தபோதும் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார்.
ஆனாலும், உடல் நலம் பாதித்திருந்த தலைவர் கருணாநிதியை நேரில் பார்க்க சென்றார். கருணாநிதி மறைவுக்குப் பின் ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்றதும் 2018 ஆம் ஆண்டு மீண்டும் கட்சியில் இணைந்தார்.
ஆனாலும், கட்சியில் தனக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற வருத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் அரசியலில் இருந்து விலகி இருந்த முல்லைவேந்தன் நேற்று,பிரச்சார கூட்டங்களில் பங்கேற்கவந்த முதல்வர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.