மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்ராஜுக்கு கொரோனா!

மக்கள் நீதி மய்யம் சார்பாக சென்னை அண்ணா நகர் தொகுதியில் வேட்பாளாராக போட்டியிடும் பொன்ராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக சென்னை அண்ணாநகர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் பொன்ராஜ் க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கோவையில் நடந்த மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் பொன்ராஜ்.
ஏற்கெனவே வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் பொன்ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிந்த நிலையில் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.