குடியுரிமைச் சட்டத்தை ஆதரிக்கும் ஒரே அரசு தமிழக அரசு தான்! வைகோ குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர். “நான் மதங்களுக்கு அப்பாற்பட்டவன். அறிஞர் அண்ணாவின் தம்பி. இந்த நாட்டில் நடக்கும் விஷயங்களை உங்கள் பார்வைக்குக் கொண்டு வருவது எனது கடமை.
மத்திய அரசு, இஸ்ஸாமியர்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதனை அனைத்து மாநிலங்களும் எதிர்த்த போது, தமிழக அரசு மட்டும் தான் எதிர்க்காமல் இருந்தது. விலைவாசி மட்டும் உயர்ந்து கொண்டே போகிறது.
பல்லடத்தின் பிரதான தொழிலான விசைத்தறி மற்றும் கறிக்கோழி தொழிலுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். எனவே, ஒரு வாக்கு சிதறாமல் எல்லோரும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்” என வைகோ தெரிவித்துள்ளார்.