என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள்! கடம்பூர் ராஜூ பரபரப்பு புகார்

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , அவர் அமமுக மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அவர், “ என் தேர்தல் பரப்புரையைத் தடுப்பதற்காக என்னை அமமுகவினர் கொலை செய்யப் பார்க்கின்றனர். தேர்தல் தோல்வி பயத்தால் தான் இவ்வாறு செய்கிறார்கள்.
நேற்று, என் கார் மீது வேண்டுமென்றே வெடியை வீசினர். கொஞ்சம் தவறி இருந்தால் என் உயிருக்கே கூட ஆபத்தாகி இருக்கலாம்.
தொடர்ந்து, என் பயணத்தை தடுப்பதையே நோக்கமாக கொண்டுள்ளனர்” என தெரிவித்தார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜூவின் இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.