ஒரே பெண்ணின் புகைப்படத்தை பார்த்து குழம்பும் வாக்காளர்கள்
தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.தேர்தலுக்கு கட்சிகள் பல உத்திகளை கையாண்டு வருகிறது.
அதில் ஒன்றுதான் விளம்பர துண்டு பிரசுரங்கள்.தற்போது அதிமுக,திமுக ஆகிய இரு கட்சிகளும் ஒரே பெண்ணின் புகைப்படத்தை தங்களது விளம்பர துண்டு பிரசுரங்களில் உபயோகித்துள்ளனர்.
இதனையடுத்து வாக்காளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.இந்நிலையில் இரு கட்சிகளும் ஒரே வலைதளத்தில் பெண்ணின் படத்தை பதிவிறக்கம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.