என் மீது சாயம் பூச முயற்சிக்கிறார்கள் – கமல்ஹாசன் பேச்சு
என் மீது சாயம் பூச முயற்சிக்கிறார்கள், காவியாக இருந்தாலும், கருப்பாக இருந்தாலும் சரி எந்த நிறமும் என் மீது ஒட்டாது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் மக்கள் நீதி மையம் சார்பில் மண், மொழி, மக்கள் காக்க என்ற பெயரில் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். என் மீது சாயம் பூச முயற்சிக்கிறார்கள், மக்கள் பிரச்சினையை சட்டசபை மட்டுமின்றி ஐ.நா சபை வரை பேச வேண்டும் என்றாலும் பேசுவேன் என தெரிவித்தார்.
மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மட்டும் நான் மக்களின் பிரதிநிதி கிடையாது. உண்மையாகவே நான் மக்கள் பிரதிநிதி தான். மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுப்போம். இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் இங்கு எதுவும் செய்ய வில்லை. எப்படி தைரியத்துடன் நான் வந்திருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். 60 வருடம் என்னை வசதியாக வாழ வைத்த மக்களுக்கு நன்மை செய்ய விரும்புகிறேன். அதற்காகவே அரசியலுக்கு வந்தேன் என்று அவர் பேசினார்.