அஸ்ஸாமில் பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் – பிரதமர் மோடி பேச்சு
அஸ்ஸாமில் பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் மற்றும் தேசிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி அமையும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் தேசிய முற்போக்கு கூட்டணியின் அரசாங்கம் அமையும் எனவும் பேசினார். இந்த இரட்டை எஞ்சின் சக்தி அஸ்ஸாமை முன்னோக்கி கொண்டுச் செல்லும் எனவும் கூறினார்.