அண்ணாமலை வேட்புமனு நிறுத்திவைப்பு?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவுற்றது. வேட்பாளர்கள் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் தேர்தல் அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு உள்ளிட்டோரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.
ஆனால், அரவக்குறிச்சி தொகுதியின் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் மீது உள்ள வழக்குகள் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என்பதால் நிறுத்தி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.