எம்.ஜி.ஆர் கழகம் திமுக கூட்டணிக்கு ஆதரவு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் கழகம் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் திரு.ஆர்.எம்.வீரப்பனின் தலைமையில் மற்றும் பொதுச்செயலாளர் டிராமலிங்கம் முன்னிலையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், ”6.4.2021-ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தினையும் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளையும் ஆதரிப்பதாக எம்.ஜி.ஆர்.கழகம் சார்பில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எம்.ஜி.ஆர்.கழக மாவட்ட செயலாளர்கள் – நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் தங்களுடைய பகுதியில் உள்ள தி.மு.கழக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் இணைந்து கூட்டணி வெற்றி பெற முழு மனதுடன் பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.