இன்றுடன் நிறைவடைகிறது வேட்புமனு தாக்கல்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 12 ஆம் தேதி முதல் தொடங்கியது. வேட்புமனுத் தாக்கலுக்கு இன்றே கடைசி நாளாகும்.

கொரோனா காலம் என்பதால் தகுந்த பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. அதன்படி, வேட்புமனு தாக்கல் செய்பவர்களுடன் இரண்டு பேர் மட்டுமே வர வேண்டும். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யமுடியும்.

மேலும், சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் வேட்பு மனுத் தாக்கல் கிடையாது என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுவரை, 3,900 க்கும் அதிகமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று கடைசி நாள் என்பதால் இன்றும் அதிக மனுக்கள் தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *