சினேகனுக்கு ரூ.10 கோடி விலை பேசப்பட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்
என்னை ஒரு அரசியல் கட்சி 10 கோடி ரூபாய்க்கு விலை பேசியது என்று சினேகன் பேசியதற்கு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
விருகம்பாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக கவிஞர் சினேகன் போட்டியிடுகிறார். இவர் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த நிலையில், என்னை ஒரு அரசியல் கட்சி 10 கோடி ரூபாய்க்கு விலை பேசியது என்றும் ஆனால் நான் விலை போகவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். உங்கள் தலைவருக்கே 10 கோடி ரூபாய் கொடுக்க எந்த அரசியல் கட்சியும் முன்வராது என்றும், உங்களுக்கு பத்து கோடியா? என்றும் பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்றும் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்
உண்மையிலேயே சினேகனை ரூபாய் 10 கோடிக்கு ஒரு அரசியல் கட்சி விலை பேசியது என்றால் அந்த அரசியல் கட்சி எது என்பதை சினேகன் தைரியமாக சொல்ல வேண்டும் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த தகவலை சினேகன் சொல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்