எடப்பாடியை டெப்பாசிட் இழக்கச் செய்வேன் – திமுக சம்பத் குமார்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முதல்வர் பழனிச்சாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் சம்பத் குமார் என்ற இளைஞர் களம் காண உள்ளார்.

முதல்வரை எதிர்த்து களம் காண்பதால் சம்பத் குமார் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், முதல்வரின் அரசியல் அனுபவமும் சம்பத் குமாரின் வயதும் ஒன்று. முதல்வரை அவரால் ஒன்றும் செய்து விட முடியாது என அதிமுகவினர் கூறிவருகின்றனர்.

ஆனால், சம்பத் குமார் “ வயதுக்கும் வெற்றிக்கும் சம்பந்தமில்லை. எடப்பாடி அவர்கள் பணபலத்தால் தேர்தலை சந்திக்கிறார். ஆனால் எங்களுக்கு மக்கள் பலம் உள்ளது. எனவே, நிச்சயம் இந்தமுறை பழனிச்சாமியை டெப்பாசிட் இழக்கச் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *