அதிமுக வேட்பாளருக்கு எதிராக திரும்பிய அக்கட்சியின் எம்.எல்.ஏ!

சேர்ந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ சந்திரசேகரன் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று சேர்ந்தமங்கலம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் சந்திரசேகரன். அவருக்கும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை.
அதனைத்தொடர்ந்து தனக்கு மீண்டும் சேர்ந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டுமென்று அதிமுக தலைமைக்கு 3 நாட்கள் கெடு விதித்திருந்தார். ஆனால் இதனை அக்கட்சி தலைமை கண்டுக்கொண்டதாக தெரியவில்லை.
இதனையடுத்து தற்போது சேர்ந்தமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளார் சந்திரனை எதிர்த்து அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் சுயேச்சையாக களமிறங்க முடிவு செய்துள்ளார்.