மதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து விட்டு தேர்தல் பரப்புரைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து, மதிமுகவும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் வைகோ, தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.