எம்.ஜி.ஆரே மூன்றாவது அணி தான்!எங்களுக்கு அரசியல் தொழில் அல்ல – கமல்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கமலஹாசன் ஆரம்பித்த மக்கள் நீதிமய்யம் கட்சி, இரு பெரும் திராப்விட கட்சிகளுக்கு மாற்று என்ற கருத்து நிலவி வருகிறது.

இதைத்தவிர மக்கள் நீதிமய்யத்தின் கூட்டணி மூன்றாவது கட்சி என்ற கருத்தும் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் முடிந்ததும் மூன்றாவது கட்சி காணாமல் போய்விடும் என பல அரசியல் கட்சித் தலைவர்களும் விமர்சித்து வந்தனர். இதற்கு கமல் பதிலளித்துள்ளார்.

ட்விட்டரில், ”மூன்றாவது அணி ஜெயித்ததே இல்லை என்கிறார்கள். எம்.ஜி.ஆரே மூன்றாவது அணி தான்” என்று விமர்சித்துள்ளார்.

மேலும், “மக்கள் நீதி மய்யத்துக்கு அரசியல் என்பது தொழில் அல்ல. அரசியல் எங்களின் கடமை. மக்கள் வாழும் இடம்தான் எனக்குக் கோயில், மக்கள்தான் என் மதம்” என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *