அதிமுகவும் பாஜகவும் வேறல்ல – ஸ்டாலின்

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுவதாக அறிவிக்கப்படுள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
திமுக தலைவர் ஸ்டாலின் மதுரையில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதில், “எடப்பாடியின் ஆட்சிகாலத்தில் விலைவாசி விஷம் போல் ஏறிவருகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்க அதிமுக ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மதுரையில் அதிமுக ஜெயிப்பது உங்கள் கையில் தான் உள்ளது. அதிமுக வெற்றி பெறுவதும் பாஜக வெற்றி பெறுவதும் ஒன்று தான். வரி விதிப்பதில் எடப்பாடிக்கும், மோடிக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இவர்களது ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை” என்று பேசி வருகிறார்.