திமுகவிற்கு தாவிய பாமக நிர்வாகிகள்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணியை முடிவு செய்து தேர்தலுக்கு தயாராகி விட்டனர்.
அதிமுக கூட்டணியில், பாமக 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், பாமகவின் மாநில துணைபொதுச் செயலாளர் பா. ஸ்ரீதர் உள்ளிட்ட 300 நிர்வாகிகள், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.