அதிமுக தேர்தல் அறிக்கையில் சிஏஏ – வை வாபஸ் பெற வைப்போம் – சிடி ரவி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான, அதிமுகவின தேர்தல் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்துவோம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து, அதிமுக கூட்டணியில் இருந்த பாஜகவின் மேலிடப் பெறுப்பாளர் சிடிரவி மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர், “குடியுரிமை சட்டம் பற்றி அதிமுக குழப்பத்தில் உள்ளது. ஆகையால் அதற்கு குடியுரிமைச் சட்டத்தின் சிறப்பு குறித்து எடுத்து கூறப்படும். மேலும், தேர்தல் அறிக்கையில் இருந்து சிஏஏ பற்றிய தகவல்களை வாபஸ் பெற வைப்போம் ” எனக் கூறியுள்ளார்.
ஆனால், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார், “சிடி ரவி கூறியுள்ளது அவருடைய தனிப்பட்ட கருத்து. குடியுரிமைச் சட்டம் தமிழகத்துக்கு தேவையில்லை என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. அதைத் தான் தேர்தல் அறிக்கையிலும் தெரிவித்துள்ளோம். எங்கள் கருத்துக்கு மாற்று கருத்து கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.