ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் முதல்வரிடம் இல்லை! பிரேமலதா குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியுடன் தொகுதிப்பங்கீட்டில் தேமுதிக விற்கு முரண்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கூட்டணியை முறித்துக் கொண்டது. தற்போது அமமுக கூட்டணியில் 60 இடங்களில் தேமுதிக போட்டியிடுகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, “ நாங்கள் 18 சீட் கேட்ட நிலையில் 13 சீட் மட்டுமே கொடுக்க அதிமுக முன்வந்தது. மேலும், 13 என்பதில் விடாபிடியாக இருந்தது. இதனால் கனத்த இதயத்துடன் கேப்டன் விஜயகாந்த அவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். கூட்டணி கட்சியை அணுகுவதில் ஜெயலலிதாவிற்கு உள்ள பக்குவம் முதல்வருக்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.