5 புதிய வாக்குறுதிகளை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!

திமுக நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் இன்று மேலும் 5 புதிய வாக்குறுதிகள் சேர்த்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
- காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் அமைக்க அனுமதி மறுக்கப்படும்
- குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்
- இந்திய குடியுரிமைச் சட்டம் 2019ஐ திரும்ப பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்
- மத்திய அரசு வெளியிட்ட சுற்றுச்ச்சூழல்தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 திரும்ப பெற வலியுறுத்தப்படும்
- விவசாயிகளுக்கு எதிரான 8 வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.