வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜகவிற்கு தாவிய திமுக எம்.எல்.ஏ!

தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், திமுக எம்.எல்.ஏ சரவணன் பாஜகவில் இணைந்தார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டு, வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டனர். அந்த வகையில் திமுக ஒரே கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியீட்டை தொடர்ந்து தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே திமுகவில் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதை அடுத்து, திமுக எம்.எல்.ஏ சரவணன் பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு மருத்துவர் சரவணன் வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் எம்எல்ஏ சரவணன் அதிருப்தியடைந்தார். தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், திமுக எம்.எல்.ஏ சரவணன் சென்னையில் பாஜக மாநில தலைவர் எல் முருகன் சந்தித்து இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.