அமமுக, தேமுதிக கூட்டணி… இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக, அமமுக உடன் இணைந்து போட்டியிட உள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு காலத்தில் எதிர்க்கட்சியாக அமர்ந்திருந்த தேமுதிகவுக்கு இப்போது மவுசே இல்லை. அதற்கு காரணம் அவர்கள் எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்து கட்சியை மேம்படுத்தவில்லை. மாறாக வாக்கு வங்கி ஒவ்வொரு தேர்தலுக்கும் குறைந்து கொண்டே வந்தது. அதனால் இந்த தேர்தலில் கூட்டணிக்காக அவர்களை யாரும் தேடவில்லை. அதனால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது.
தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக தகவல் கசிந்த நிலையில் அமமுக உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உறுதி செய்தார்.

இந்நிலையில் இருகட்சிகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. 200 தொகுதிகளுக்கும் அதிகமாக அமமுக வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், சிலரை வாபஸ் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமமுக உடன் தேமுதிக நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், 70க்கும் மேற்பட்ட தொகுதிகளை அமமுக, தேமுதகிவுக்கு ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.