புதுச்சேரியில் தேமுதிகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியில் வெளியீடு

புதுச்சேரியில் தேமுதிக போட்டியிடும் 30 தொகுதிகளில் 16 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது. இதைத்தொடர்ந்து, புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது என மாநில செயலர் வி.பி.பி வேலு தெரிவித்தார்.

இதையடுத்து முதற்கட்டமாக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று(மார்ச் 31) தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

 மண்ணாடிப்பட்டு               – எஸ்.மணிகண்டன்

திருபுவனை(தனி)               – விநாயகமூர்த்தி

மங்களம்                – பச்சையப்பன்

வில்லியனூர்                    – பாசில்

உழவர்கரை                         – எழில்பேர்

கதிர்காமம்              – மோட்சராஜன்

காமராஜ் நகர்            -நடராஜன்

முத்தியால்பேட்டை          -அருணகிரி

உருளையன்பேட்டை     –கதிரேசன்

நெல்லித்தோப்பு            –பூவராகவன்

அரியாங்குப்பம்             – லூர்துசாமி

மணவெளி                        – திருநாவுக்கரசு

நெட்டப்பாக்கம்           -முருகவேல்

காரைக்கால் வடக்கு        – வேலுச்சாமி

காரைக்கால் தெற்கு       -ஜெகதீசன்

நிரவி திருப்பட்டினம்      -அருள்ராஜி

ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…