தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு…. 4 தொகுதிகளில் குழப்பம் நீடிப்பு!

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் மிக விரைவாக தேர்தல் பணியை செய்து வருகின்றன. எதிர்க்கட்சியான திமுக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன.

இந்த நிலையில் காங்கிரசும் 21 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை இன்று இரவு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி

பொன்னேரி- துரை சந்திரசேகர்.

ஸ்ரீபெரும்புதூர்- செல்வபெருந்தகை,

சோளிங்கர்- முனிரத்தினம்,

ஊத்தங்கரை- ஆறுமுகம்,

கள்ளக்குறிச்சி- மணிரத்தினம்,

ஒமலூர்- மோகன் குமாரமங்கலம்,

ஈரோடு கிழக்கு- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் திருமுகன் ஈவேரா,

உதகமண்டலம்- கணேஷ்,

கோவை தெற்கு- மயூரா ஜெயக்குமார்,

உடுமலைப்பேட்டை- தென்னரசு,

விருத்தாசலம்- ராதாகிருஷ்ணன்,

அறந்தாங்கி- திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன்,

காரைக்குடி- மான்குடி, மேலூர்- ரவிசந்திரன்,

ஸ்ரீவில்லிபுத்தூர்- மாதவ ராவ்,

சிவகாசி- அசோகன், திருவாடனை- கருமாணிக்கம்,

ஸ்ரீவைகுண்டம்- ஊர்வசி அமிர்தராஜ்,

தென்காசி- பழனி நாடார்,

நாங்குநேரி- ரூபி மனோகரன்,

கிள்ளியூர்- ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மேலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மறைந்த தமிழக காங்கிரஸ் எம்பி எச். வசந்த்குமாரின் மகன் விஜய்வசந்த போட்டியிடுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளவங்கோடு, வேளச்சேரி, குளச்சல், மயிலாடுதுறை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…