14 தொகுதியில் திமுக – பாஜக நேரடிப் போட்டி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து 3 ஆவது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதில், பாஜகவுடன் நேரடியாக 14 தொகுதிகளில் திமுக மோதுகிறது. மேலும், இந்த தேர்தலில் 12 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுகின்றனர்.